Friday, May 14, 2021

Index Funds பற்றிய பதிவு:

 Index Funds பற்றிய பதிவு:

என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund  பத்தி பாத்துருவோமா?


1. Index Fund என்றால் என்ன?
பங்குச் சந்தையில் ஒரே Index சேர்ந்த பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதுதான் Index Fund எனப்படுகிறது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வாகிக்க மேலாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். ஆனால், Index  fund களுக்கு Fund Manager தேவையில்லை.

ஆனால் பின்பற்ற வேண்டிய குறியீட்டை (Index) உருவாக்கும் அனைத்து பங்குகளிலும் முதலீடு செய்கிறார். Fund Manager நிதியின் portfolioவை உருவாக்கும்போது பெஞ்ச்மார்க் குறியீட்டை (Benchmark Index) அப்படியே காப்பி பண்ணிட்டு portfolioவை கரெக்டா maintain பண்ணுவார்.
Index Mutual Fund வகை சென்செக்ஸ் (Sensex) அல்லது நிஃப்டியில் (Nifty) உள்ள ஒரு நிறுவனத்தின் வெயிட்டேஜ் அதன் மூலதனத்தைப் பொறுத்தது. இது குறியீட்டின் மொத்த சந்தை மூலதனத்தின் சதவீதமாகும். எனவே, ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ1 கோடி, குறியீட்டின் ரூ .200 கோடி என்றால், அதன் பங்கு 0.5% எடையைக் கொண்டுள்ளது.
2. ஏன் / யார் இந்த Index Fund முதலீடு செய்யலாம்:
பங்குச் சந்தையில் இண்டெக்ஸ் வளர்ச்சிக்கு ஏற்ப நேரடியாகவே முதலீடும் வருமானம் கொடுக்கும். சில சமயங்களில், Index Fund போதிய வேகத்தில் வளர்ச்சியடையாமல் இருக்கலாம். அதே சமயம் சில பங்குகள் மட்டும் நல்ல வேகத்தில் முன்னேறும். அந்த மாதிரி நேரத்துல மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட Index Fund குறைவான வருமானம் கொடுக்கும். இருந்தாலும், ஏராளமான முதலீட்டாளர்கள் Index fundகளை அதிகம் விரும்புகின்றனர். காரணம் என்னன்னா  மேலாளர்களால் Fund manager நிர்வகிக்கப்படும்.

மியூச்சுவல் ஃபண்ட்கள் அதிக வருமானம் தராத காலங்களில் கூட Index Fund களில் நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. அதனால முதல் முறை நீண்ட முதலீட்டுக்கு பிளான் பண்ணறவங்களுக்கு Index Mutual Fund சிறந்த சாய்ஸ்.
Mutual Funds அல்லது தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதற்கான

அதிக risk  எடுக்க விரும்பாதவர்களுக்கு, ஆனால் பங்கு சந்தைக்கு returns  பெற விரும்புவோருக்கு Index Mutual Fund சிறந்த சாய்ஸ்.
3. Index Fund திட்டத்தின் அம்சங்கள்:
a. மற்ற Mutual Fund களுடன் ஒப்பிடும்போது Index Fund குறைந்த செலவுகள் மற்றும் குறைந்த இயக்க செலவுகள் கொண்டதாகும்.
இங்கே, Fund managers ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் பணம் அனைத்தும் சேமிக்கப்படுகிறது & முதலீட்டாளர்கள் குறைந்த செலவு விகிதங்களுடன் பயனடைவார்கள். Index Fund களில், Fund Manager  Index காப்பி பண்ண வேண்டும். எனவே, மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது குறியீட்டு நிதிகளின் விஷயத்தில் செலவு விகிதம் (Expense Ratio) குறைவாக உள்ளது.
b. Index Fund என்பது பல்வேறு துறைகளில  முதலீடு செய்வது, பங்குகளின் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை (well diversified portfolio) வழங்குகிறது, இதன் விளைவாக ஒரு பங்கு அல்லது துறை சரியாய் perform பண்ணவில்லை என்றாலும் உங்கள் index மற்ற துறை மூலம் முதலீட்டு அபாயத்தைத் குறைக்கும்.
c. குறைவான நிர்வாக செல்வாக்கு: குறிப்பிட்ட குறியீட்டின் நகர்வுகளை நிதிகள் வெறுமனே பின்பற்றுவதால், எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை மேலாளர் தேர்வு செய்ய வேண்டியதில்லை. (Manual Intervention is avoided.)
இந்தியாவில் 3 முக்கிய வகை குறியீட்டு நிதிகள்:
a. சென்செக்ஸ் குறியீட்டு நிதிகள் (Sensex Index Funds): இந்த நிதிகள் BSE சென்செக்ஸ் குறியீட்டை 30 பங்குகளைக் கொண்ட ஒரு அளவுகோலாகக் கண்டறிந்து, அதே வெயிட்டேஜில் முதலீடு செய்கின்றன, இவை சென்செக்ஸில் அளவிடப்படுகின்றன.
b. நிஃப்டி குறியீட்டு நிதிகள் (Nifty Index Fund): இந்த நிதிகள் NSE நிஃப்டி இன்டெக்ஸை 50 பங்குகளைக் கொண்ட ஒரு அளவுகோலாகக் கண்காணித்து, அதே எடையில் முதலீடு செய்கின்றன, இவை நிஃப்டியில் அளவிடப்படுகின்றன.
c. ஜூனியர் நிஃப்டி குறியீட்டு நிதிகள் (Junior Nifty Index Funds): இந்த நிதிகள்
என்எஸ்இ நிஃப்டி ஜூனியர் இன்டெக்ஸை 50 பங்குகளைக் கொண்ட ஒரு அளவுகோலாகக் கண்காணிக்கின்றன, அதே வெயிட்டேஜில் முதலீடு செய்கின்றன, இவை ஜூனியர் நிஃப்டியில் அளவிடப்படுகின்றன.

4. Index Fund திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் சிறு குறிப்புகள்:

a. Index Mutual Fund களின் flexibility இல்லை.அதாவது குறிப்பிட்ட Index யை அப்படியே fund மேனேஜர் காப்பி செய்வதால்.
b. செலவு விகிதம் (Expense Ratio) :
குறைந்த செலவு விகிதம் இருக்கற மாதிரி நிதியைத் index fundயை செலக்ட் பண்ணிக்கோங்க. 
c.கண்காணிப்பு பிழை (Tracking Error):
Tracking Error என்றால், நிதி வருவாயின் (Fund Returns) வரையறைக்கு (Bench Mark) இடையேயான வேறுபாடு (Index).கண்காணிப்புப் பிழையைக் குறைப்பது என்பது அதே வருவாயை உருவாக்க நிதி மேலாளர் நன்கு நிர்வகிக்கப்பட்டதாகும். எனவே, குறைந்த கண்காணிப்பு பிழை உள்ள index fund யை செலக்ட் பண்ணிக்கோங்க.d. AUM: தற்போது அதிக AUM உள்ள ஒரு index fund யை செலக்ட் பண்ணிக்கோங்க.
e. முதலீட்டு காலம்: 
Index Fund பொதுவாக நீண்ட கால முதலீட்டு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமானவை. இந்த நிதிகள் குறுகிய காலத்தில் அடுத்தடுத்த ஏற்ற இறக்கங்களுக்கு உட்படும், இது நீண்ட காலத்திற்கு சராசரியாக இருக்கும். இது 10% முதல் 12% வருமானத்தை ஈட்டும்.
f.  வருமான வரி: 
Index fund லிருந்து நீங்க பெறும் வருமானம் Capital Gains ஆகா கருதப்படும். இது பொதுவாக நீங்கள் முதலீடு செய்த நேரத்தைப் பொறுத்தது.
வைத்திருக்கும் காலம் 1 வருடம் வரை இருந்தால், எஸ்.டி.சி.ஜி 15% (Short term capital gain – STCG) ஆகவும், வைத்திருக்கும் காலம் 1 வருடத்திற்கும் அதிகமாக இருந்தால், எல்.டி.சி.ஜி 10% % (Long  term capital gain – LTCG) ஆகவும் இருக்கும்.
g.  அதிக வருமானத்திற்கான Direct திட்டத்தைத் செலக்ட் பண்ணுங்க. Direct திட்டங்கள் Regular திட்டங்களை விட குறைந்த Expense Ratio கொண்டிருப்பதால். நீண்ட கால முதலீடுற்கு Direct திட்டங்களே அதிக வருமானத்தை தரும்.

5.எப்படி இந்த Index fun இல் முதலீடு செய்வது:
இது மற்ற mutual fund எப்படி முதலீடு செய்கிறோமோ அதே மாதிரி தான் இந்த Index fund யும் முதலீடு செய்யலாம். ஆனால் மேலே சொன்ன சிறு குறிப்புகளை கருத்தில் கொண்டு உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் Index fund ஐ செலக்ட் செய்து முதலீடு செய்யுங்கள்.


இதுல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதை நீங்க முதல படிச்சிட்டு Mutual fund இல் முதலீடு பண்ணுங்க:
"மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்."


Information is Wealth! 


இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.

Featured

Index Funds பற்றிய பதிவு:

 Index Funds பற்றிய பதிவு: என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund  பத்தி பாத்துருவோமா? 1. Index Fund என்றால் என்ன? பங்குச் சந்தையில் ஒரே Index சே...

Popular