Friday, April 9, 2021

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) பற்றிய பதிவு:

Mutual Funds சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP)  பற்றிய பதிவு:

வாங்கனா வணக்கம்னா 

என்ன பங்கு சௌக்கியமா? இந்த பதிவில் என்ன சொல்லபோறிங்க பங்கு

இந்த பதிவில் kutty story on  சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) நண்பா

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி அந்த நிதியைப் பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால சந்தைப் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதாகும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இதில் மாதா மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய முடியும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது ஈக்விட்டி (பங்குச் சந்தை), பாண்ட் /Debt இவற்றில் மாதாமாதம் சிறு தொகை தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஒரு திட்டமாகும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்வது சந்தை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய ஆபத்தைக் குறைக்கிறது. சந்தை நேர்மறையானதாக இருக்கும்போது, உங்களுக்குக் குறைவான அலகுகள் (NAV) ஒதுக்கப்படுகின்றன, சந்தை வீழ்ச்சியடையும் போது, உங்கள் முதலீட்டின் அதே தொகைக்கு அதிக அலகுகளைப் (NAV) பெறுவீர்கள்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP), நீண்டகால முதலீட்டுக்கு எளிதான சிறந்த வழியாகும்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் சில ஆயிரம் ரூபாயைச் சேமிக்க நல்லத் திட்டம் எது என்றால், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP உங்களுக்குச் சிறந்த வழியாகும். 

இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து இடையிலேயே நிறுத்திக் கொள்ளலாம்.

உங்களால் சிறிய தொகையை நீண்ட காலத்துக்குத் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் சேமிக்க முடியும்.

உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு ரூ .5000 முதலீடு செய்தால், ரூ .6 லட்சம் முதலீட்டிற்குக் குறைந்தபட்ச 12% வட்டிக்கு எதிராக ரூ .11.5 லட்சம் கிடைக்கும்.

உங்கள் இலக்கையும் தீர்மானித்து, நீங்கள் SIP-யை தொடங்கலாம்.

நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது, அதில் முக்கியமாக Expense Ratio, AUM, Fund Size, compounding etc…

பல முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன, ஆனால் நான் Groww மற்றும் Cleartax App பயன்படுத்தி நேரடித் திட்டங்களில் (Direct Plans) முதலீடு செய்துள்ளேன்.  கணக்கை open செய்வது மிகவும் எளிதானது,app download fund select செய்து Pan card and aadhaar card போன்ற ஆவணப்படுத்தப்பட்ட ஆவணத்தைப் பதிவேற்றவும்

என்ன நண்பா நண்பி எல்லாரும் kutty story படித்துக்கொண்டு like & share செஞ்ச மற்றவர்களும் இதைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.


நண்பர் அஜித் உடன் உங்களை அடுத்த பதிவில் இன்னும் நல்ல தலைப்புடன் வருகிறேன். நன்றி. வணக்கம். 

No comments:

Post a Comment

Featured

Index Funds பற்றிய பதிவு:

 Index Funds பற்றிய பதிவு: என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund  பத்தி பாத்துருவோமா? 1. Index Fund என்றால் என்ன? பங்குச் சந்தையில் ஒரே Index சே...

Popular