Index Funds பற்றிய பதிவு:
என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund பத்தி பாத்துருவோமா?
Information is Wealth!
இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.
Index Funds பற்றிய பதிவு:
என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund பத்தி பாத்துருவோமா?
Information is Wealth!
இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.
ELSS Mutual Funds பற்றிய பதிவு:
என்ன பங்கு, இந்த வாரம் ELSS Mutual Fund பத்தி
பாத்துருவோமா?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) பற்றிய பதிவு:
PPF பற்றி இந்த வாரம் பார்த்திடலாம் வாங்க.
பொது வருங்கால வைப்பு நிதி என்பது Public Provident Fund (PPF) இந்தியாவின் சேமிப்பு மற்றும் வரி சேமிப்பு திட்டமாகும். சிறிய சேமிப்புக்களைத் திரட்ட 1968 இல் மத்திய நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
PPF என்பது மிகச் சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். PPF என்பது சுயதொழில் செய்வோருக்கும், EPF ஊழியர்களுக்கும் முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு நன்மையையும் வழங்குகிறது. PPF முதலீடு மத்திய அரசால் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதால் இது முற்றிலும் ஆபத்து இல்லாதது. (வட்டி மாறுதலுக்கு உட்பட்டது).
நீண்ட கால முதலீட்டிற்கு இந்த PPF முதலீட்டைத் தேர்வு செய்யலாம். மேலும் வருமானம், பாதுகாப்பு மற்றும் வரி சேமிப்பு ஆகியவற்றின் கலவையாக இருப்பதால் இந்த திட்டம் மிகவும் பிரபலமானது.
• நடுத்தர வர்க்கத்தில் உள்ள பலர் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீடு செய்கின்றனர்.
• தற்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும்.
• ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
• PPF முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம். PPF வரும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
• PPF கணக்கில் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை மற்றும் வட்டி இவை இரண்டிற்கும் வரிவிலக்கு உண்டு.
• PPF கணக்கில் வட்டியை ஆண்டுதோறும் கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்கில் செலுத்தப்படும்.
• PPF கணக்கு திறந்து 7-வது நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் Withdrawal அனுமதிக்கப்படுகிறது.
• PPF கணக்கு திறந்து 3-ம் நிதியாண்டிலிருந்து 6-ம் நிதியாண்டு Loan வசதி கிடைக்கிறது.
• கணக்கு துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், நமது கணக்கில் உள்ள பணத்தின் 50 சதவீத அளவிலான பணத்தை நாம் திரும்பப் பெறலாம். அதற்கு மேல் பெற இயலாது.
• PPF கணக்கை ஒரு Post Office-ல் இருந்து மற்றொரு Post Office-க்கு Transfer செய்துக்கொள்ளலாம்.
• Nominee நியமிக்கும் வசதியும் இதில் உள்ளது.
PPF கணக்கைத் துவங்குவது எப்படி?
கணக்கைத் துவங்கத் தேவையான ஆவணங்கள்:
• Permanant Account Number (Pan Card), முகவரி ஆவணம் - Aadhaar card, Driving Licence, Passport, Voter Card இவற்றில் ஏதாவது ஒன்று, பாஸ்போர்ட் போட்டோ - 2
• நீங்கள் PPF Account-யை Open செய்யும்போது, ஆரம்ப தொகையாக Rs.100 செலுத்த வேண்டும்.
• ஒரு நிதியாண்டிற்குக் குறைந்தபட்சம் Rs.500 ரூபாயாவது Deposit செய்ய வேண்டும்
• அதிகபட்சமாக Rs.1,50,000 வரை ஒரு நிதியாண்டிற்குச் செலுத்தலாம்.
• தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தபட்சம் தொகை செலுத்தப்பட வேண்டும். நடுவில் கட்ட தவறினால், PPF கணக்கு இடையிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.
• PPF திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
• பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலமாக PPF கணக்கைத் துவங்க முடியும்.
• தங்கள் பெயரில் எந்த கிளை அலுவலகத்திலும் கணக்கு துவங்க முடியும்.
• 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மேஜர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ்க் கணக்கு துவங்கலாம். கணக்க துவங்குபவர், அந்த மைனருக்குப் பாதுகாவலர் ( Guardian) ஆகச் செயல்படுவார்.
• Joint account இல்லை.
• ஒரு Post Office PPF கணக்கில், ஒரு ஆண்டில் ஒரே தவணையாக மொத்தமாக அல்லது அதிகபட்சம் 12 தவணைகளில் செலுத்தலாம்.
• ஆண்டின் இறுதியில் வட்டி, நமது கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி 7.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. (அடுத்த quarterல இந்த வட்டி விகிதம் 6.4% என மாற்றப்படலாம்.)
கூட்டு வட்டி (Cumulative Interest) என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுவதால், இதன்மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் என்பது குறைந்த பட்சம் 9 % முதல் 12 % ஆகும்,
• PPF கணக்கை 15 ஆண்டுகளுக்கு முன்பே Close செய்ய முடியாது.
• ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய நீதி அரசு வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கிறது.
கடந்த 3 வருடம் PPF யின் வட்டி விகிதம்:
நீங்க Tax Savingக்கு மட்டும் இந்த PPF முதலீடு செய்வதற்கு ELSS Mutual Fund ல முதலீடு செய்யலாம். இதைப் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்.
Information is Wealth!
இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) பற்றிய பதிவு:
மன்னா, ஏன்னா மங்குனி அமைச்சரே? இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன மன்னா? மங்குனி அமைச்சரே, தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போலக் கஷ்டமான விடுகதை இல்லை.
EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது EPF சேமிப்பிற்கு ஒரு பங்களிப்பை வழங்க வேண்டும், மேலும் இதேபோன்ற பங்களிப்பை முதலாளியும் வழங்குகிறார். இது எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு வழங்கப்பட்ட நிதி. இந்த திட்டத்தில் ஊழியர் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியைச் சேமிக்க முடியும், இதனால் அவர்கள் ஓய்வுபெறும் நேரத்தில் அதைப் பயன்படுத்தலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் சம்பளம் பெறும் நபர்கள் தங்களது அடிப்படை + அகவிலைப்படி (Basic + Dearness Allowance) இல் 12% அல்லது EPF-க்கு ரூ .780 பங்களிப்பு செய்வது கட்டாயமாகும். 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கும், அடிப்படை சம்பளம் ரூ .6291க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் EPF இல் பங்கேற்பது கட்டாயமாகும். மேலும், சேமிக்கப்பட்ட தொகை வட்டி சம்பாதிக்கிறது மற்றும் வரி விலக்குக்குத் தகுதியுடையது.
EPF பற்றிய மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், இது ஓய்வுக்குப் பிறகு பயன்படுத்தக்கூடிய முதலீட்டுத் திட்டமாகத் தேர்வு செய்யலாம். EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வழியாக அதிக வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கும் எவ்வளவு வட்டி வழங்கப்படும் என்பதை EPFO அறிவிப்பாக வெளியிடும். உதாரணமாக, இந்த நிதியாண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
EPFO சேமிப்புத் திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இது மட்டுமல்லாது EPF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. இங்கு சில நன்மைகளைப் பார்ப்போம்.
1.ஓய்வூதிய திட்டம் (Employee Pension Plan):
இது ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகையை ஓய்வூதியம் திட்டத்திற்கு பிடித்தம் செய்கிறது. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது. 12 % இல் 3.67% ஊழியர்களின் கணக்கிற்கும், மீதமுள்ள 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது.
2.சிறந்த சேமிப்பு திட்டம் :
EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வழியாக அதிக வருமானம் கிடைக்கிறது. 8.5% வட்டி வழங்கப்படும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்குக் கூட இவ்வளவு வட்டி கிடைப்பதில்லை. இது நீண்ட கால முதலீட்டுக்கு நல்ல முதலீட்டுத் திட்டம்.
3.இலவச காப்பீட்டு வசதி:
உங்கள் EPF கணக்கு தொடங்கியவுடன், இயல்பாகவே இலவச காப்பீட்டைப் பெறலாம். ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) கீழ் ரூ .6 லட்சம் காப்பீடு கிடைக்கும். ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால், EPFO இன் செயலில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வமா வாரிசுக்கு, ரூ .6 லட்சம் வரை மொத்த தொகை கிடைக்கும். இந்த நன்மையை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.
4.வரிச் சலுகைகள்:
வருமான வரியில் பணத்தை மிச்சப்படுத்த EPF மிகவும் எளிய மற்றும் சிறந்த வழி. EPF கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 C இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளைச் சேமிக்க முடியும். ஆனால் புதிய வரிவிதிப்பு (New Tax Regime) முறையில் இந்த நன்மை நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உங்கள் வரியைக் கணக்கிடுவதற்குப் பழைய வரி முறையையே (Old Tax Regime) தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நன்மையை நீங்கள் பெறலாம்.
UAN (UNIVERSAL ACCOUNT NUMBER):
UAN என்பது 12 இலக்க தனித்துவமான நம்பர் ஆகும். UAN எண் மூலம், நீங்கள் எத்தனை முறை உங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றினாலும் UAN எண் மூலம் அனைத்து EPF கணக்குகளையும் இணைத்துக்கொள்ளலாம். (ஒவ்வொரு நிறுவனத்திலும் உங்களுக்குத் தனிப்பட்ட EPF கணக்கு துவங்கப்படும்.) நீங்கள் EPF கணக்கு வைத்துள்ள வரை அல்லது நீங்கள் பணி செய்யும் காலம் வரை அனைத்து கணக்குகளும் உபயோகப்படுத்தல் இருக்கும். எனவே UAN எண்ணைக் கொண்டு அனைத்து கணக்குகளின் விபரங்களையும் சேர்ப்பதே இந்த UAN எண்ணின் பணி.
அதாவது வரலாறு முக்கியம் அமைச்சரே? போல இந்த UAN நம்மாளுக்கு உதவுகிறது.
மேலும் UAN மூலம், EPF பாஸ் புத்தகத்தை, நற்சான்றிதழ்களைப் புதுப்பித்தல், பழைய கணக்கை மாற்றுவது, முந்தைய உறுப்பினர் ஐடிகளை தற்போதைய வற்றுடன் இணைத்தல், மாதாந்திர EPF பங்களிப்பு, SMS சேவை போன்ற தகவல் சேவைகளைச் செயல்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைச் செய்வதில் நிறைய எளிமை ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்து வசதிகளையும் பெற, ஊழியர்கள் UAN portal லில் ஒரு கணக்கை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். KYC விவரங்களையும் பதிவேற்றவும் புதுப்பிக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
சரி இந்த EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி என்று பார்ப்போம்:
வேலையிழந்தால் பிஎஃப் பணம் எடுக்க அனுமதி ஒரு மாத வேலையின்மைக்குப் பிறகு EPF நிலுவைத் தொகையில் 75% வரையில் திரும்பப் பெறலாம். இதே வேலையின்மை தொடர்ந்தால், மீதமுள்ள 25% தொகையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. சம்பளதாரரின் திருமணம் அல்லது மகன்/ மகள் திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவச் செலவு, வீட்டுக்கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் எனப் பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு. இதற்காக நீங்கள் Form 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி?
இதற்காக நீங்கள் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் சென்று UAN கொடுத்து Login செய்யவும். அதன் பிறகு Claim என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடவும். அதன் பிறகு process for online claim என்பதை கிளிக் செய்யவும். அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும். அவற்றைச் சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதைத் தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு பணம் எதற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்குத் தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்பு உங்களுக்கு உங்களது EPF தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.
UMANG App பயன்படுத்தியும் EPF கணக்கிலிருந்து எளிதாகப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் EPFO ஆப்ஷனை கண்டறிய வேண்டும்.
அதில் Employee Centric services என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Raise Claim என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது EPF UAN Number- ஐ பதிவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Password-ஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையைத் தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து உங்களுக்கு Claim reference number அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
எனினும் அரசின் இந்த வசதியைத் தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாருடன் UAN Number, UMANG App, மொபைல் எண் ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Information is Wealth!
இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.
சிபில் ஸ்கோர் பற்றிய பதிவு:
லோன், கிரெடிட் கார்டு அப்ளை பண்ணப் போன சிபில் ஸ்கோர் முக்கியம் பிகிலு nu சொல்ராங்க.
சரி இந்த சிபில் ஸ்கோர்ன என்னவென்று இந்த பதிவில் விரிவா பார்த்துவிடுவோம் வாங்க.,
Credit Information Bureau (India) Ltd என்கிற சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பு கடன் பெறும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர்கள் அந்தக் கடனை திரும்பச் செலுத்துவதை அடிப்படையாக வைத்து சிபில் ஸ்கோரை வழங்குகிறார்கள்
இந்த சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்கலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கின்றன.
சிபில் ஸ்கோர் என்பது கடந்த காலத்தில் வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியுள்ளீர்களா? என்பது போன்ற பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது.
சிபில் ஸ்கோர் என்பது உங்களின் கடன் தகுதியைக் குறைக்கும் மூன்று இலக்க மதிப்பெண் ஆகும்.
இது 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 700க்கு மேல் இருக்கும் சிபில் ஸ்கோர் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
சிபில் ஸ்கோரை எப்படித் தெரிந்து கொள்ளலாம் உங்களது சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ள cibil வலைத்தளத்திற்கு https://cibil.com என்ற பக்கத்திற்குச் செல்லவும். அதில் free annual cibil score option க்ளிக் செய்யவும், அதில் உங்களது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் Pan Card விவரங்கள் மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகக் கொடுக்கவும்.
பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும், அதை உறுதிப்படுத்திய பிறகு அங்கு உங்களது சிபில் ஸ்கோரினை நீங்கள் காண முடியும்.
ஒரு வருடத்திற்கு Cibil இருந்து ஒரு விரிவான கடன் அறிக்கையை இலவசமாகப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. எனினும் இது ஒரு முறை மட்டுமே இலவசமாகப் பார்க்க முடியும்.
நீங்கள் ஒரு முறைக்கு மேல் பார்க்க விருப்பப்பட்டால், நீங்கள் கட்டணத்தினை செலுத்திப் பார்த்துக் கொள்ள முடியும். இது ஒரு மாதத்திற்கு 550 ரூபாய் எனவும், இதே 6 மாதங்களுக்கு 800 ரூபாயும், 1 வருடத்திற்கு 1,200 ரூபாய் செலுத்தியும் பார்த்துக் கொள்ளலாம். இந்த கட்டணம் செலுத்தினால்
நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
அதிக சிபில் ஸ்கோர் இருப்பதின் நன்மைகள்:
- கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு விரைவான ஒப்புதல்
- கடன்களுக்கான மலிவான வட்டி விகிதங்கள்
- சிறந்த மற்றும் அதிக கடன் வரம்பைக் கொண்ட கிரெடிட் கார்டுகள்
- கடன் விண்ணப்பங்களுக்கான செயலாக்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் மீதான தள்ளுபடி
சரி இந்த சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி என்று பார்ப்போம்?
1.சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தவும்:
உங்கள் நிலுவைக் கடனுக்கான திருப்பிச் செலுத்துதல்களைத் தவறவிடுவது ஒரு பெரிய தவறாகும், ஏனெனில் இது உங்கள் கடன் மதிப்பெண்ணை மோசமாகப் பாதிக்கும்.
2.உங்கள் Loan Account உள்ள பிழைகளைச் சரிபார்க்கவும்:
உங்கள் கடனை முழுவதுமாக செலுத்தி, loan account close செய்து விட்டு, ஆனால் நிர்வாகப் பிழை காரணமாக அது open not closed தோன்றுகிறது என்றால். அதை நீங்கள் தான் சரிபார்க்க வேண்டும். இந்த பிழைகளைத் தீர்க்கப்பட்டது என்றால்,உங்கள் மதிப்பெண் உடனடியாக உயரும்.
3.கடன்களைப் பராமரிக்கவும்:
கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகன கடன், வீட்டுக் கடன் போன்ற பாதுகாப்பான கடன்கள் போன்ற பாதுகாப்பற்ற கடன்களின் நல்ல கலவையை வைத்திருப்பது எப்போதும் நல்லது. உங்களிடம் அதிக பாதுகாப்பற்ற கடன்கள் (Personal Loan) இருந்தால், உங்கள் பாதுகாப்பற்ற கடன்களை முன்கூட்டியே செலுத்த முயற்சிக்கவும்.
4.கிரெடிட் கார்டுகள்:
உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைக் கட்டுவது உங்கள் நடத்தை குறிக்கிறது. சில நேரங்களில் பரிவர்த்தனைகள் வங்கிகளுக்குள் தாமதமாகும், எனவே உங்களது கிரெடிட் கார்டு முழு நிலுவைகளை உரியத் தேதிக்கு 4 - 5 நாட்களுக்கு முன்பே செலுத்தவும், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும்.
5. கூட்டுக் கணக்கு:
கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர் அல்லது கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதைத் தவிர்க்கவும், ஏனென்றால் மற்ற நபரின் கிரெடிட் ஸ்கோர் உங்கள் சிபில் மதிப்பெண்ணைப் பாதிக்கும்.
6.பல கடன்களை எடுப்பதைத் தவிர்க்கவும்:
ஒரே நேரத்தில் பல கடன்களை எடுத்துக்கொள்வது, அவை அனைத்தையும் செலுத்த உங்களிடம் போதுமான நிதி இல்லை என்பதைக் காட்டுகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த ஒரு நேரத்தில் ஒரு கடனை எடுத்து வெற்றிகரமாகச் செலுத்துவது நல்லது.
7.உங்கள் கடன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்:
உங்கள் கிரெடிட் கார்டை அதன் உச்ச வரம்பிற்குப் பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான விரைவான வழிகளில் ஒன்றாகும். உங்கள் கடன் வரம்பு ரூ. ஒரு மாதத்திற்கு 1,00,000 ரூபாய், நீங்கள் ரூ. 30,000 உங்கள் கிரெடிட் கார்டு மூலம். 30% ஐத் தாண்டினால், மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும்.
8.நீண்ட கால கடன்:
கடனை எடுக்கும்போது, பணத்தைத் திருப்பிச் செலுத்த நீண்ட காலத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வழியில், EMI குறைவாக இருக்கும், மேலும் நீங்கள் சரியான நேரத்தில் அனைத்து நிலுவைத்தொகையைக் கட்ட முடியும். தவறியவர்கள் பட்டியலிலிருந்து உங்களை ஒதுக்கி வைத்து, உங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்துவார்கள்.
9.கடன் வரம்பு:
உங்கள் கார்டின் கடன் வரம்பை அதிகரிக்க உங்கள் வங்கி உங்களிடம் கேட்டால் ஒருபோதும் வேண்டாம் என்று சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாதமும் நீங்கள் அதிகப் பணம் செலவழிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தமல்ல, மாறாக உங்கள் செலவுகளை நிர்வகிப்பதில் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
10.கடன் விசாரணைகள்
தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் பல குறுகிய காலத்திற்குள் அதிகமான விசாரணைகள் இருந்தால், அது கடன் தேவையை வெளிப்படுத்துகிறது, ஒவ்வொரு விசாரணைகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்க வேண்டும்.
வழக்கமாக ஒரு நபரின் நிலைமையைப் பொறுத்து உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த 4- 13 மாதங்கள் ஆகும்,. நீங்கள் பணத்தைச் செலவழிக்கும்போது அல்லது கடன் எடுக்கும்போது புத்திசாலித்தனமாகவும், பொறுமையாகவும் சரியான நேரத்தில், பணத்தைக் கட்டி வந்தால் நிறைய நல்லது.
இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.
Mutual Funds சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) பற்றிய பதிவு:
வாங்கனா வணக்கம்னா
என்ன பங்கு சௌக்கியமா? இந்த பதிவில் என்ன சொல்லபோறிங்க பங்கு
இந்த பதிவில் kutty story on சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) நண்பா
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி அந்த நிதியைப் பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால சந்தைப் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதாகும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இதில் மாதா மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய முடியும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது ஈக்விட்டி (பங்குச் சந்தை), பாண்ட் /Debt இவற்றில் மாதாமாதம் சிறு தொகை தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஒரு திட்டமாகும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்வது சந்தை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய ஆபத்தைக் குறைக்கிறது. சந்தை நேர்மறையானதாக இருக்கும்போது, உங்களுக்குக் குறைவான அலகுகள் (NAV) ஒதுக்கப்படுகின்றன, சந்தை வீழ்ச்சியடையும் போது, உங்கள் முதலீட்டின் அதே தொகைக்கு அதிக அலகுகளைப் (NAV) பெறுவீர்கள்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP), நீண்டகால முதலீட்டுக்கு எளிதான சிறந்த வழியாகும்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் சில ஆயிரம் ரூபாயைச் சேமிக்க நல்லத் திட்டம் எது என்றால், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP உங்களுக்குச் சிறந்த வழியாகும்.
இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து இடையிலேயே நிறுத்திக் கொள்ளலாம்.
உங்களால் சிறிய தொகையை நீண்ட காலத்துக்குத் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் சேமிக்க முடியும்.
உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு ரூ .5000 முதலீடு செய்தால், ரூ .6 லட்சம் முதலீட்டிற்குக் குறைந்தபட்ச 12% வட்டிக்கு எதிராக ரூ .11.5 லட்சம் கிடைக்கும்.
உங்கள் இலக்கையும் தீர்மானித்து, நீங்கள் SIP-யை தொடங்கலாம்.
நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது, அதில் முக்கியமாக Expense Ratio, AUM, Fund Size, compounding etc…
பல முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன, ஆனால் நான் Groww மற்றும் Cleartax App பயன்படுத்தி நேரடித் திட்டங்களில் (Direct Plans) முதலீடு செய்துள்ளேன். கணக்கை open செய்வது மிகவும் எளிதானது,app download fund select செய்து Pan card and aadhaar card போன்ற ஆவணப்படுத்தப்பட்ட ஆவணத்தைப் பதிவேற்றவும்
என்ன நண்பா நண்பி எல்லாரும் kutty story படித்துக்கொண்டு like & share செஞ்ச மற்றவர்களும் இதைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.
நண்பர் அஜித் உடன் உங்களை அடுத்த பதிவில் இன்னும் நல்ல தலைப்புடன் வருகிறேன். நன்றி. வணக்கம்.
TN Power Finance வைப்புத் திட்டம் (F.D) பற்றிய பதிவு:
அண்ணே, இது என்னண்ணே திட்டம்?
எனக்குத் தெரியாது, நீயே சொல்லுடா
சரி அண்ணே, இந்த பதிவில் TN Power Finance வைப்புத் திட்டம் (F.D) பற்றி விவாதிக்க உள்ளோம்.
டி.என் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (TN Power Finance Corp) நிலையான வைப்புகளில் 8.25 சதவீத வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. டி.என் பவர் ஃபைனான்ஸ் என்பது வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC), இது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்திற்கு (TANGEDCO) மட்டுமே கடன் வழங்குகிறது
இது நாட்டின் பெரும்பாலான வங்கிகள் வட்டி வழங்குவதை விடக் கிட்டத்தட்ட 2-3 சதவீதம் அதிகம்.
Non Cumulative FD:
வட்டி மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தப்படும். முதிர்ச்சியில், உங்கள் முதலீட்டை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.இந்த FD காலம் 2, 3, 4 மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஆகும். வட்டி விகிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து 7.25% முதல் 8.00% கிடைக்கும்
Cumulative FD:
வட்டி காலாண்டு கூட்டு மற்றும் முதிர்ச்சியில் செலுத்தப்படும். இந்த FD களின் காலம் 1, 2, 3, 4 மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஆகும். வட்டி விகிதங்கள் 7.25% முதல் 8.50% வரை இருக்கும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட FD இன் காலத்தைப் பொறுத்துக் கிடைக்கும்.
மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி விகிதங்கள் கிடைக்கும்.
தனியார் நிறுவன வைப்புத்தொகையை விடப் பாதுகாப்பானவை. வட்டி செலுத்துதல் எப்போதும் சரியான நேரத்தில் செலுத்தப்படும் என்று அர்த்தமல்ல. இதன் பொருள் என்னவென்றால், மின் நிதி நிறுவனம் சிக்கலில் சிக்கினால், TN அரசாங்கங்களின் ஈடுபாட்டின் காரணமாக உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.
சரியான நேரத்தில் வட்டி செலுத்தும் TN Power Finance அவர்களின் நிதி நிலைமையைப் பொறுத்தது. நூறு சதவீதம் அரசுக்குச் சொந்தமானது 100% பாதுகாப்பானது என்று அர்த்தமல்ல.
முதலீட்டாளர்கள் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் நிலையான வைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ .50,000 மற்றும் அதற்குப் பிறகு ரூ .1,000 மடங்காகும்.
நீங்கள் ஆன்லைனில் முதலீடு செய்யலாம்
மொபைல் APP உள்ளது.
இதைத் தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் (இந்த பதிவில்) எழுத்திட்டேன், இனி நீங்க like, share செய்து உங்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினர் அனைவரும் இதைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.
அடுத்த பதிவில் நல்ல தலைப்புடன் வருகிறேன். நன்றி. வணக்கம்.
ஐயா, இந்த மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன ஐயா?
சரி வாருங்கள். இந்த பதிவில் மியூச்சுவல் பண்ட் பற்றி விவாதிப்போம்.
மியூச்சுவல் பண்ட் என்பது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி பங்குகள், பத்திரங்கள் மற்றும் குறுகிய கால கடன் போன்ற பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
மியூச்சுவல் பண்டின் ஒருங்கிணைந்த இருப்புக்கள் அதன் போர்ட்போலியோ (Portfolio) என அழைக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் பங்குகளை வாங்குகிறார்கள். ஒவ்வொரு பங்கும் நிதியில் முதலீட்டாளரின் பகுதி உரிமையையும் அது உருவாக்கும் வருமானத்தையும் குறிக்கிறது.
இந்த நிதியின் கார்பஸ் ஒரு நிதி மேலாளர் அல்லது போர்ட்ஃபோலியோ மேலாளர் எனப்படும் முதலீட்டு நிபுணரால் நிர்வகிக்கப்படுகிறது. பத்திரங்கள், பங்குகள், தங்கம் மற்றும் பிற சொத்துக்கள் போன்ற பல்வேறு பத்திரங்களில் கார்பஸை முதலீடு செய்வது அவரது வேலை. முதலீட்டில் கிடைக்கும் லாபங்கள் அல்லது இழப்புகள் முதலீட்டாளர்களால் கூட்டாக நிதியில் அவர்கள் அளிக்கும் பங்களிப்புக்கு ஏற்ப பகிரப்படுகின்றன.
மியூச்சுவல் பண்ட் முதலீடு என்பது, வங்கி மற்றும் பங்குச்சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டைவிடச் சிறந்தது. நீண்டகால நோக்கில் முதலீடு மேற்கொள்ளப்படும்போது, நம்முடைய பணம் பாதுகாப்போடு இருப்பது மட்டுமல்லாமல் அதிக வருமானமும் வழங்கக்கூடியது.
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதன் மூலம், நல்ல லாபம் கிடைக்கும் என்றபோதிலும், நாம் எத்தகைய மியூச்சுவல் பண்ட்களை தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது லாபங்கள் அமையும். சந்தையில், ஆயிரக்கணக்கான மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன.
இவற்றில் சரியான திட்டங்களைக் கண்டறிந்து அதில் முதலீடு செய்வதென்பது மிகவும் சவாலான விசயம் ஆகும்.
இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில் விவாதிப்போம்.
நன்றி. வணக்கம்.
இந்த பதிவில் ஒரு நடுத்தர வர்க்க நபருக்கான (Middle Class Person) முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
முதலீடு என்பது சொத்து அல்லது சொத்துக்களை லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக வாங்குவது மற்றும் உங்கள் முதலீட்டில் அதிக வருவாயைப் பெறுவதற்கான வழி.
நீங்கள் விரும்பிய இலக்கை நிறைவேற்ற உங்கள் பணம் போதுமான அளவு வளரக்கூடிய பொருத்தமான திட்டத்தை நீங்கள் தேட வேண்டும்.
உங்கள் முதலீட்டு முடிவு ஆபத்து காரணிகள் (Risk Factors) மற்றும் உங்கள் ஆபத்து எடுக்கும் திறன்களை (Risk Taking Ability) பொறுத்தது.
இந்த இரண்டு Factors நபருக்கு நபர் வேறுபடுகின்றன.
முதலீட்டுத் திட்டங்கள் முதலீட்டாளரின் எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.
உங்கள் முதலீடுகளைத் திட்டமிடுவதற்கான முதல் படி, உங்கள் தேவைக்கும் தேவைகளுக்கும் ஏற்ற சரியான முதலீட்டுத் திட்டத்தைக் கண்டுபிடிப்பதாகும். முதலீட்டுத் திட்டமிடல் போதுமான ஆராய்ச்சி செய்தபின் கவனமாக முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பதும், எப்போதும் உங்கள் முதலீடுகளைத் தவறாமல் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
இந்தியாவில், நிறைய முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.
முதலீடு எப்போதும் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டது
1. இலக்குகள் (Goal)
2. முதலீட்டுக் காலம் (Investment Period)
3. வரிச் சலுகைகள் (Tax Benefits)
4. ஆபத்து காரணிகள் (Risk Factors)
5. வருமானம் (Returns)
முதலீட்டைத் திட்டமிடுவதற்கு முன், நாம் முறையாக ஆராய்ச்சி செய்து முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும், இது நீண்ட காலத்திற்கு அதிக வருவாயை வழங்குகிறது. அதை முடிவு செய்வது எப்போதும் கடினமான தேர்வாகும். நடுத்தர வர்க்க சம்பள நபருக்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள்:
1.வங்கி தொடர்ச்சியான வைப்பு (RD) மற்றும் நிலையான வைப்பு (FD):
பாதுகாப்பான ஆனால் குறைந்த வட்டி விகிதம் சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதங்களை ஈட்டும் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு FD.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் பயன்படுத்தப் போகாத அதிகப்படியான தொகை ஒரு நிலையான வைப்புத்தொகையில் (FD) பாதுகாப்பாக வைக்கப்படலாம்.
RD யும் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கை விட அதிக வட்டி விகிதத்தைப் பெறுகிறது, எந்தத் தொகையையும் முதலீடு செய்யுங்கள் ,
சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி.
2. தங்கம்:
தங்கத்தில் முதலீடு செய்யச் சிறந்த வழி Gold Mutual Fund, Gold EFT மற்றும் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் தங்கப் பத்திர திட்டத்திலும் நீங்கள் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யப்பட்ட தொகையில் ஆண்டுக்கு 2.5% வட்டி பெறுவீர்கள்.
3.மியூச்சுவல் பண்டு (Mutual Fund):
நீங்கள் பங்குச் சந்தையில் புதியவர் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால் Index Fund களில் முதலீடு செய்வது நல்லது – (Nifty / Nifty next 50 Index Fund) குறைந்தபட்சம் தொகை ரூ .100.
ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகள் (Equity Mutual Fund) தொடர்ச்சியாக அதிக வருமானத்தை ஈட்டியுள்ளன. மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு ஒரு மொத்த தொகை அல்லது மாதாந்திர SIP ரூ. 500 முதலீடு செய்யலாம். இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
4.EPF/PPF/VPF:
PPF: குறைந்தபட்ச காலம் 15 ஆண்டுகள், வட்டி விகிதம் - 7.1%
உங்கள் வழக்கமான ஓய்வூதிய பங்களிப்பை (EPF) தவிர, பிபிஎஃப் (PPF) கணக்கில் முதலீடு செய்வது உங்களுக்கு நிறைய வரிகளை மிச்சப்படுத்தும். ஏனென்றால், பிபிஎஃப் (PPF) முதலீட்டை IT சட்டத்தின் பிரிவு
80 C இன் கீழ் விலக்கு என்று கூறலாம்.மேலும், திரட்டப்பட்ட அசல் மற்றும் வட்டித் தொகையும் திரும்பப் பெறும் நேரத்தில் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
5.ஓய்வூதியத் திட்டம் (NPS):
நீண்ட கால திட்டம், உங்கள் வயது 60க்கு பிறகு என்.பி.எஸ் (NPS) என்பது ஓய்வூதியத் திட்டமாகும், உங்கள் வேலை அல்லது நகரத்தை மாற்றும்போது உங்கள் நிதியை மாற்ற வேண்டியதில்லை. கூடுதல் நன்மை என்னவென்றால், பிபிஎஃப் (PPF) உடன் ஒப்பிடும்போது
நீங்கள் பங்கு மற்றும் கடன் முதலீடுகளிலிருந்து வருமானத்தைப் பெறுவீர்கள், உங்கள் பங்களிப்புகள் அனைத்தும் ரூ. 1.5 லட்சம் Tier 1 மூலதனத்திற்குப் பிரிவு 80 C இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவிர, ரூ .50,000 வரை கூடுதல் சுய பங்களிப்பை நீங்கள் கோரலாம்.
பிரிவு 80 CCD (1B) இன் கீழ் 50,000 வரிச் சலுகைகள்.
6.பங்குச் சந்தை முதலீடு (Share Market/Equity):
பங்குச் சந்தை முதலீடுகள் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய திறன் கொண்டவை, மேலும் அதிக அபாயங்களைக் கொண்டுள்ளன. அதேபோல், ப்ளூ-சிப் (Blue Chip) நிறுவனங்களின் பங்குகள் கடந்த காலங்களில் பெரும் வருமானத்தை அளித்துள்ளன.
7.தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்:
a.தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) என்பது குறைந்த ஆபத்து, நிலையான வருமான திட்டம், இது எந்த தபால் நிலையத்திலும் எளிதாகத் திறக்கப்படலாம். புதிய என்எஸ்சி (NSC) வட்டி விகிதம் 6.8% மற்றும் ஆண்டுதோறும் கூட்டாக முதிர்ச்சியடையும்.
அதிகபட்ச வரம்பு இல்லை என்றாலும், ஒரு நிதியாண்டில் ரூ .1.5 லட்சம் வரை முதலீடு வருமான வரி விலக்குக்குத் தகுதி பெறுகிறது. முதிர்வு காலம் 5 ஆண்டுகள்
b.மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS): புதிய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) வட்டி விகிதம் 7.4% ஆகும், இது ஒவ்வொரு காலாண்டிலும் செலுத்தப்படும். இத்தகைய வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு காலாண்டிலும் மீட்டமைக்கப்படும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ .1,000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ . 15 லட்சம். இதற்கு 5 ஆண்டுகள் முதிர்வுக்காலம் உள்ளது. இந்த திட்டம் முதிர்ச்சியடைந்த 1 வருடத்திற்குள் மேலும் 3 வருட காலத்திற்கு நீட்டிக்கப்படலாம்.
c.சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): 2015 இல் தொடங்கப்பட்டது, இது பெற்றோர் அல்லது பெண் குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் ஒரு பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளைப் பூர்த்தி செய்வதாகும். ஆண்டுக்கு 8.1 சதவீத வட்டி விகிதம்
d.கிசான் விகாஸ் பத்ரா (KVP): இந்த திட்டம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவார். KVP யின் முதிர்வுக்காலம் 124 மாதங்கள். புதிய KVB வட்டி விகிதம் 6.9% ஆகும், இது ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கப்பட்டு முதிர்ச்சியுடன் செலுத்தப்படுகிறது.
இந்த
பதிவில் அரசாங்கத்
தங்கப் பத்திரம்
திட்டம் (Sovereign Gold
Bond):
தங்கப் பத்திரம்
திட்டம் மத்திய அரசால் 2015 நவம்பரில்
தொடங்கப்பட்டது, தங்கத்தை வாங்க இது ஒரு
மாற்று வழி.
நீங்கள் தங்கப் பத்திரம் 1 கிராம் (கிராம்) மடங்குகளில் வாங்கலாம். நீங்கள் அதிகபட்ச தங்கம் பத்திரங்கள் ஒரு நிதியாண்டுக்கு 4 கிலோ வாங்கலாம்.
இந்தியா குடியுரிமை
பெற்ற நபர்கள், HUF கள், ஒரு அறக்கட்டளை
போன்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்,
பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள்
மற்றும் கிளப்புகள், கூட்டு நிறுவனங்கள் மற்றும்
தனியார் அல்லது பொது வரையறுக்கப்பட்ட
நிறுவனங்கள் இந்த
இனிமேல் RBI ஒவ்வொரு
மாதமும்
- இந்திய அரசு
சார்பில்
- தங்கத்தின் மதிப்பு
உயர
- தங்கப் பத்திரம்
(SGB) வாங்குவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவு
1 கிராம் மற்றும் ஒரு நிதியாண்டுக்கு
ஒரு நபருக்கு 4 கிலோ.
- SGB களை கூட்டுக் கணக்காகவும்
(Joint Account) வாங்கலாம்.
- கூட்டு வைத்திருந்தால்
(Joint Account), முதல் விண்ணப்பதாரருக்கு மட்டுமே 4 கி.கி முதலீட்டு
வரம்பு பயன்படுத்தப்படும்.
- ஒவ்வொரு புதிய
வெளியீட்டிற்கும் முன்னர், தங்கப் பத்திரம் (SGB) வெளியீட்டு
விலையை RBI வெளியிடும்.
- பத்திரத்தின் வெளியீட்டு
விலை சந்தா காலத்திற்கு முந்தைய
வாரத்தின் கடைசி 3 வணிக
- தங்கப் பத்திரங்களுக்கான
கட்டணம் ரொக்கக் கட்டணம் (அதிகபட்சம்
ரூ .20,000 / - வரை) அல்லது Demand Draft அல்லது
காசோலை
அல்லது மின்னணு
வங்கி மூலம் இருக்கும்.
- தங்கப் பத்திரம்
(SGB) Demat வடிவமாகவும்
- தங்கப் பத்திரங்களை
வாங்கி எட்டு ஆண்டுகள் வைத்திருக்கலாம்.
எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும்
வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.
- அவசரத் தேவை
ஏற்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்
பத்திரத்தை விற்று
-
- பத்திரங்களை
-
- தனி நபர்கள்
தங்களின் குழந்தைகள் பெயரிலும் வாங்கலாம்.
- தனி நபர்கள்
கணவன் மனைவியாகச் சேர்ந்தும் (Joint Holder) வாங்கலாம்.
- குறிப்பாக மைனர்கள்
பெயரில்
- நியமன (Nomination) வசதி உள்ளது.
தங்கப் பத்திரம் (SGB) - நன்மைகள் மற்றும் குறைபாடுகள்:
நன்மைகள்:
-
-
-
-
- ஆண்டுக்கு 2.5% வட்டி
வருமானம் கிடைக்கும்.
- தங்கத்தின் சுத்தம்
தூய்மைக்கு இந்திய அரசு உத்தரவாதம்
அளிக்கிறது.
- தங்க விலை
நிலவரங்களைக் கண்காணித்தால் தங்கப் பத்திரங்களை விரைவாக
வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.
குறைபாடுகள்:
- நீண்ட கால
முதலீடு (8 ஆண்டுகள்).
-
தங்கப் பத்திரம்
(SGB) யார் முதலீடு செய்ய வேண்டும்:
தங்க முதலீடுகள்
மீது ஆர்வம் கொண்டவர்கள்.
குறைந்த ஆபத்துள்ள
முதலீட்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்
இது ஆண்டுதோறும்
ஒரு நிலையான வருமானத்தையும் உங்களுக்கு
வழங்குகிறது.
தங்கத்துடன் ஒப்பிடுகையில்
தங்கப் பத்திரம் வாங்க அல்லது விற்பனை
செய்வதற்கான செலவும் மிகவும் குறைவு
தான்.
நீண்ட கால
முதலீடுகள் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
Index Funds பற்றிய பதிவு: என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund பத்தி பாத்துருவோமா? 1. Index Fund என்றால் என்ன? பங்குச் சந்தையில் ஒரே Index சே...