Thursday, March 4, 2021

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB Mobile App):

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB):

தங்கள் IPPB Mobile App பயன்படுத்திச் சேமிப்புக் கணக்குகளை டிஜிட்டல் முறையில் திறக்க வசதியை வழங்குகிறது. கடந்த ஒரு வருடமாக இதைப் நான் பயன்படுத்துகிறேன்.

தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் IPPB Mobile App பயன்படுத்தி அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும். முன்னதாக, வாடிக்கையாளர் பணத்தை டெபாசிட் செய்வதற்கும், இருப்பை சரிபார்ப்பதற்கும், பணத்தை மாற்றுவதற்கும் மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகளுக்கும் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.உங்கள் தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சமிர்தி கணக்கு (SSA) ஆகியவற்றிற்கும் எளிதாகப் பணத்தை மாற்றலாம்.

IPPB கணக்கைத் திறக்க, நீங்கள் IPPB APP பதிவிறக்கி டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.

விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

உங்கள் மொபைல் தொலைப்பேசியில் உள்ள IPPB மொபைல் வங்கி பயன்பாட்டிற்குச் சென்று, பின்னர் ‘Open Account’ என்பதைக் கிளிக் செய்க.

உங்களுக்குத் தேவையானது உங்கள் PAN Card எண் மற்றும் ஆதார் அட்டை எண்.

இரண்டையும் உள்ளிட்டு, உடனடி வங்கிக் கணக்கைத் திறக்க உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள்.

தாயின் பெயர், கல்வித் தகுதிகள், முகவரி மற்றும் Nomination விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.

விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டதும், கணக்கு திறக்கப்பட்டு பயன்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

ஆரம்ப குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. நூறு மட்டுமே.

உங்கள் Savings, PPF, SSA கணக்குகளில் தொகையை டெபாசிட் செய்ய அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்ல தேவையில்லை.

இந்த டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். கணக்கு திறக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், கணக்கிற்கான Biometric Authentication நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும், அதன் பிறகு அது வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும்.

அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று Post man அணுகவும்.

இந்த IPPB சேமிப்புக் கணக்குகள் Join Account கிடையாது. Cheque Book, Debit Card அல்லது ATM கார்டையும் கிடையாது.

No comments:

Post a Comment

Featured

Index Funds பற்றிய பதிவு:

 Index Funds பற்றிய பதிவு: என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund  பத்தி பாத்துருவோமா? 1. Index Fund என்றால் என்ன? பங்குச் சந்தையில் ஒரே Index சே...

Popular